பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலவும் மோசடி பேர்வழிகள்.!! புகார் தெரிவிக்க-9385214793 என்ற WhatsApp-எண்ணுக்கு மெசேஜ் செய்யலாம்-மாவட்ட ஆட்சியர்.!!

கோவை: பத்திரிக்கையாளர்கள்‌ எனக்கூறி தவறான செயல்களில்‌ ஈடுபடுவார்கள்‌ மீதான புகார்களை 9385214793 என்ற WhatsApp-எண்ணிற்கு குறுந்தகவல்‌ மற்றும்‌ மனுக்களை ஆதாரங்களுடன்‌ அளிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.


கோவை: பத்திரிக்கையாளர்கள்‌ எனக்கூறி தவறான செயல்களில்‌ ஈடுபடுவார்கள்‌ மீதான புகார்களை 9385214793 என்ற WhatsApp-எண்ணிற்கு குறுந்தகவல்‌ மற்றும்‌ மனுக்களை ஆதாரங்களுடன்‌ அளிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

நடுநிலை தவறாமல்‌ செயல்பட்டு - எளிய மக்களின்‌ நண்பனாகத்‌ திகழ்ந்து வரும்‌ பல்வேறு பத்திரிக்கையாளர்கள்‌ போற்றுதலுக்குரிய களப்பணியாற்றி வரும்‌ அதேவேளையில்‌, ஆங்காங்கே ஒருசிலர்‌ அரசுத் துறை அலுவலகங்களுக்கும்‌, தனியார்‌ நிறுவனங்களுக்கு நேரடியாகவும்‌, அலைப்பேசி வாயிலாகவும்‌ அழைத்து செய்தியாளர்கள்‌ எனத் தெரிவித்து, சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபடுவதுடன்‌, நேரங்காலம்‌ பார்க்காமல்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த செய்திகளை எடுத்துரைக்கும்‌ கன்னியமிக்க பல்வேறு பத்திரிக்கையாளர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும்‌, அவர்களின்‌ பெயருக்குக் களங்கம்‌ கற்பிப்பதாகவும்‌, இதுதொடர்பான பல்வேறு முன்னணி மற்றும்‌ முதுநிலை செய்தியாளர்களிடமிருந்து பல்வேறு புகார்கள்‌ தொடர்ந்து வரப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில்‌, இதுபோன்ற புகார்களின்‌ மீது நடவடிக்கை எடுத்திடச் செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலருக்கும்‌, காவல்‌ துறையினருக்கும்‌

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்களும்‌ பத்திரிக்கைகளுக்கு வழங்க வேண்டிய தகவல்களைச் செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌ வாயிலாகவே வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்‌, இதுபோன்ற பத்திரிக்கையாளர்கள்‌ எனக்கூறி தவறான செயல்களில்‌ ஈடுபடுவார்கள்‌ மீதான புகார்களை 9385214793 என்ற WhatsApp-எண்ணிற்கு குறுந்தகவல்‌ மற்றும்‌ மனுக்களை ஆதாரங்களுடன்‌ அளிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...