கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம்..! தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - மருத்துவமனை முதல்வர் தகவல்!

கோவை: கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையத்தில் 6 மாதத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நர்சுகள், ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி 75 நர்சுகள், 15 ஆய்வக டெக்னீசியன்கள், 55 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 8 ரேடியோ கிராபர்கள், 8 டயாலிசிஸ் டெக்னீசியன்கள், 20 இசிஜி டெக்னீசியன்கள், 10 சிடி டெக்னீசியன்கள், 15 மயக்கவியல் நிபுணர் கள், 6 மருந்து ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ரூ.12,000 முதல் ரூபாய் 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவம் சான்றிதழ்களுடன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter