அடுத்த ஆண்டு மார்ச் 2022 வரையிலான சொத்து வரியை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவால் வணிகர்கள், வர்த்தகர்கள், தொழில் துறையினர் அதிர்ச்சி!

கோவை: அடுத்த ஆண்டு மார்ச் 2022 வரையிலான சொத்து வரியை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால், வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



கோவை: அடுத்த ஆண்டு மார்ச் 2022 வரையிலான சொத்து வரியை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால், வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொத்து வரி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள உத்தரவால் வணிகர்கள், தொழில் நிறுவனத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர், ‘‘தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தொழில் நகரான கோவை மாவட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை அனைத்து தொழில்துறையினரையும் கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சொத்து வரி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள உத்தரவு அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

வழக்கமாக முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பருக்கு முன்பு செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து மார்ச் வரையிலான அடுத்த அரையாண்டுக்கான சொத்து வரி, பின்னர் செலுத்தப்படும். தற்பொழுது நோய்த்தொற்று பரவல் காரணமாக வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், முதல் அரை ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்த சொன்னாலாவது ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால், அடுத்த ஆண்டு மார்ச் 2022 வரையிலான காலகட்டத்திற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை மூன்று நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ள செயல், வணிகர்கள் வர்த்தகர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே பல நூறு கோடி ரூபாய் கடந்த ஆண்டுக்கான சொத்து வரி நிலுவை உள்ளது. அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம். தவிர, தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்துவதற்கும் செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கிடவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சொத்து வரி செலுத்துவதற்கு அம்மாநில அரசுகள் சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.'' என்று வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...