தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் 15-ம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை 2வது தவணை, மளிகை பெட்டகம் வழங்க அரசு உத்தரவு!

கோவை: கொரோனா நிவாரண தொகையான இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை தொகுப்பு பெட்டகமும் வரும் 15ம் தேதியிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா நிவாரண தொகையான இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை தொகுப்பு பெட்டகமும் வரும் 15ம் தேதியிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கையெழுத்திட்டிருந்தார். முதல் தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 14 மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகம் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, கொரோனா நிவாரண தொகையான இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை தொகுப்பு பெட்டகமும் வரும் 15ம் தேதியிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் இன்று முதல், கார்டுதாரர்களுக்கு வழக்கமான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்குகிறது. வரும் 15ம் தேதியில் இருந்து 2,000 ரூபாய் நிவாரண தொகையும், மளிகை தொகுப்பும் வழங்கப்பட உள்ளன.

கொரோனா பாதிப்பு கால நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது. இம்மாதம், இரண்டாவது தவணையான 2,000 ரூபாயுடன், மளிகை உள்ளிட்ட 14 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில், இன்று முதல் வழக்கமான பொருட்கள் வினியோகம் துவங்குகிறது. அரிசி கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்குவதுடன், மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசியும் வழங்கப்பட உள்ளது. மளிகை தொகுப்பையும், கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணையான 2,000 ரூபாயையும், இரண்டாவது வாரம் முதல் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...