கோவை மாநகராட்சியில் 3 நகர்நல மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் பணி!!

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள மூன்று நகர் நல மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள மூன்று நகர் நல மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கோவை கொரோனா தொற்று இரண்டாம்‌ அலையின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்‌, கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம்‌ மற்றும்‌ மத்திய மண்டலத்தில் புரூக்‌ பில்டுஸ்‌ சாலையில்‌ அமைந்துள்ள சீதாலட்சுமி ஆரம்ப சுகாதார நிலையம்‌ ஆகிய மூன்று மையங்களில் நாளை காலை தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த மையங்களில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (29.04.2021) காலை 9.00 மணி முதல் Covid Shieldதடுப்பூசியானது போடப்படுகிறது" என ஆணையர் மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...