வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை: வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.



கோவை: வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயிர் சொத்து போன்றவற்றை காப்பாற்றுவதில் வீரதீர செயல்களைப் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அண்ணா பதக்கம் 2020 - 2021ம் ஆண்டு குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உயிர் சொத்து போன்றவற்றை காப்பாற்றுவதில் வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம். இந்த பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே அண்ணா பதக்கம் பெற விரும்புபவர்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், அதில் உயிர் சொத்து போன்றவற்றை காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் செய்வதற்கான விவரத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம் கோவை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...