கோவையில் பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்குண்டான வழிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்குண்டான வழிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில்‌ அப்புறப்படுத்துவதற்குண்டான வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதன்‌ தொடா்ச்சியாக, மருத்துவக்‌ கழிவு

மேலாண்மைக்குண்டான சுகாதார கட்டமைப்புகளை தயார்‌ செய்ய போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே மருத்துவமனைகள்‌, சுகாதார மையங்கள்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்‌ ஆகியவற்றிலிருந்து மருத்துவக்கழிவுகள்‌ தனியாக பெறப்பட்டு தனியார்‌ நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, நாம்‌ அன்றாடம்‌ பயன்படுத்தும் முகக்கவசங்கள்‌, கையுறைகள்‌, சானிடரி நாப்கின்கள்‌, பேபி டையாபர்கள்‌ மற்றும்‌ பல மருத்துவக்‌ கழிவுகளை தனியாக ஒரு பையில்‌ சேமித்து தங்கள்‌ தெருவில்‌ வரக்கூடிய தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, ஒருமுறை மட்டும்‌ பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்த்து, துவைத்து மீண்டும்‌ பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இனிவரும்‌ மழைக்காலங்களில்‌ இத்தகைய கழிவுகளை சிறப்பாக கையாள மாநகராட்சி எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்‌ கொள்வதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...