மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து

கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும் குகைகளில் புகுந்து செல்லும் மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான வண்டி எண் 56136/37 இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மலை ரயில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter