இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு - இந்திய விமானப்படையில்‌ நேரடி ஆட்சேர்ப்பு முகாம்‌

கோவை : இந்திய விமானப்படையில்‌ Airman ஆக குரூப்‌ “X“ Education Instructor பணியிடத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு முகாம்‌ 17.10.2019 முதல்‌ 21.10.2019 வரை கோவை மாவட்டம்‌ பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌ Dept of Physical Education, Indoor Stadium-தில் நடைபெறவுள்ளது.

இளநிலை பட்டம்‌ பெற்றவர்கள்‌ 19.07.1995 முதல்‌ 01.07.2000-க்குள்‌ மற்றும்‌ முதுநிலை பட்டம்‌ பெற்றவர்கள்‌ 19.07.1999 முதல்‌ 01.07-2000-க்குள்‌ பிறந்து இருத்தல்‌ வேண்டும்‌. திருமணம்‌ ஆனவர்கள்‌ இம்முகாமில்‌ கலந்து கொள்ளலாம்‌.

கல்வித்தகுதி BA அல்லது MA ஆங்கிலம்‌ அல்லது BSc அல்லது MSC, Physics / Psychology / Chemistry / Mathematics / IT/ Computer Science/ Statistics சிவில்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ பட்டப்படிப்புடன்‌ தேர்ச்சி B.Ed, பாடத்தில்‌ குறைந்த பட்சம்‌ 50% மதிப்பெண்ணுடன்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

மேலும்‌ விபரங்களுக்கு ஏர்மென்‌ செலக்சன்‌ போர்டு, Air force Station, தாம்பரம்‌ கிழக்கு, சென்னை அலுவலகத்தை 044-22396561 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.airmenselection.cdac.in என்ற இமெயில்‌ முகவரியிலோ அணுகலாம்‌.

கோவை மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌ இவ்வாய்ப்புகளைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...