தாராபுரம் அருகே அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்!

அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், கொண்டு வந்த 21,609 கிலோ மக்காச்சோளம், ரூ.4.85 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.4.85 லட்சத்துக்கு மக்காச்சோளம் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் திருப்பூர் விற்பனை குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றைய தினம் (24.03.2023) மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.



இதற்காக திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 21,609 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், மக்காசோளம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2,247க்கும் குறைந்த பட்சமாக ரூ.2,238-க்கும் விலை போனது. இதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 171க்கு மக்காச்சோளம் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...