வெண்டைக்காய் சாகுபடியில் உடுமலை விவசாயிகள் ஆர்வம்!

உடுமலை பகுதியில் கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். போதியளவு வருமானம் கிடைப்பதால் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை பகுதியில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நிறைந்த வருமானம், சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சல், மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால் தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறைந்த கால பயிர்களை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர்.

குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.



தக்காளி, மிளகாய், பூண்டு சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகும் பயிராக வெண்டைக்காய் உள்ளது. மேலும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.



குறிப்பாக சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட அசைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. சமீப காலமாக சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.



எனவே விவசாயிகள் தற்போது வெண்டைக்காயை தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் பெற்று வருகின்றனர்.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...