உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு..! - வேளாண்மை உழவர் நலத்துறை முக்கிய அறிவிப்பு

உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தானியங்கள் உலர்த்தவும், மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியங்களை மூடி பாதுகாக்கவும், 50 சதவீதம் மானிய விலையில் கிடைக்கும் தார்பாய்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தானியங்கள் உலர்த்தவும், மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியங்களை மூடி பாதுகாக்கவும் தார்பாய்கள் 50% மானிய விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.

தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், கைபேசி எண் கொண்டு வந்து கொடுத்து வாங்கி பயன்படுத்தவும். மேலும் பேட்டரி ஸ்பிரேயர், சிறு குறு விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் தொகுப்பு 50% மானியத்தில் கிடைக்கும்.

இதைதவிர கடப்பாரை-1, மண்வெட்டி-1, களைகொத்து-1, கதிர்அருவாள்-2, மண் அள்ளும் சட்டி-1 இவை அனைத்தும் மானிய விலையில் கிடைக்கும். காலம் தாழ்த்தாது உடனே வந்து வாங்கிப் பயன்படுத்த வேளாண்மை உழவர் நலத்துறை கேட்டுக்கொள்ளப்படுகிறது என உடுமலை வட்டார வேளாண்மை அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவலுக்கு உதவி அலுவலர் அமல்ராஜ் என்பவரை கிழ்கண்ட 97512-93606 தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...