காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி - ஈஷா மற்றும் கோவை வேளாண் பல்கலை அழைப்பு!

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் நாளை விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி குறித்த இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவையில்‌ வரும் 25ம் தேதி (நாளை) தைவானில்‌ உள்ள உலக காய்கறி மையம்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஈஷா மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி நடைபெறுகிறது.

செம்மேட்டில்‌ உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில்‌ நடைபெறும்‌ இப்பயிற்சியில்‌ ரசாயனங்களை பயன்படுத்தாமல்‌ இயற்கை முறையில்‌ காய்கறி சாகுபடி செய்யும்‌ வழிமுறைகள்‌ குறித்து வேளாண்‌ வல்லுநர்கள்‌ பயிற்சி அளிக்க உள்ளனர்‌.

குறிப்பாக, காய்கறி சாகுபடியில்‌ பூச்சி நோய்‌ மேலாண்மை செய்வது, பல பயிர்‌ சாகுபடி மூலம்‌ வருமானத்தை அதிகரிக்கும்‌ வழிமுறைகள்‌, பூச்சி கொல்லிகளின்‌ செலவில்லாத விவசாய வழிமுறைகள்‌, வரப்பு பயிர்களின்‌ பயன்கள்‌, பூச்சிகளை கட்டுப்படுத்தும்‌ புதிய உத்திகள்‌ என பல்வேறு அம்சங்கள்‌ குறித்து இந்நிகழ்ச்சியில்‌ விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

கோவையில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ இயக்குநர்கள்‌, பேராசிரியர்கள்‌, முன்னோடி விவசாயிகள்‌ பங்கேற்று ஆலோசனைகள்‌ வழங்க உள்ளனர்‌. மேலும்‌, மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ பயிற்சியாளர்கள்‌ மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள்‌ குறித்து விளக்கம்‌ அளிக்க உள்ளனர்‌.

மார்ச்‌ 25-ம்‌ தேதி காலை 9 மணி முதல்‌ மாலை 4 மணி வரை நடைபெறும்‌ இந்த இலவச பயிற்சியில்‌ பங்கேற்க விரும்பும்‌ விவசாயிகள்‌ 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்‌ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...