தாராபுரம் அருகே மக்காச்சோளம் ஏலம் ரூ.3.50 லட்சத்திற்கு விற்பனை

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ. 2226க்கும் குறைந்தபட்சமாக ரூ.2180க்கும் மக்காச்சோளம் விலை போனது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த திருப்பூர் விற்பனை குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதற்காக, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 15,717 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ. 2226க்கும் குறைந்தபட்சமாக ரூ.2180க்கும் மக்காச்சோளம் ஏலம் போனது. இதன்மூலம், மொத்தமாக மூன்று புள்ளி ஐந்து லட்சத்திற்கு மக்காச்சோளம் விற்பனையானது.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...