கோவை வேளாண் பல்கலையில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி

கோவை வேளாண் பல்கலையில் வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், நேரடியாக வேளாண் பல்கலைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரியில் உள்ள அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையத்தில்‌ இந்த பயிற்சியானது நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில்,

*நெல்லி பானங்கள்‌ - பழரச பானம்‌ மற்றும்‌ தயார்‌ நிலை பானம்.‌

*நெல்லி ஜாம்‌.

*தேன்‌ நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய்‌, பொடி மற்றும்‌ துருவல்‌.

*தொழில்‌ தொடங்குவதற்கான உரிமம்‌ பெற்றுக்‌ கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்‌.

ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்‌.

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்‌ பயிற்சியின் முதல்‌ நாளன்று பயிற்சி கட்டணமாக ரூ.1,770 (ரூ.1500 + GST 18%) செலுத்த வேண்டும்.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர் - 647003.

தொலைபேசி எண் - 94885 18268

மின்னஞ்சல் - [email protected]

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...