துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி சுற்றுலா வாகனம் நிறுத்தம்: கோவை நவக்கரையில் பரபரப்பு

கோவை நவக்கரை அருகே மலேசிய சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகன ஓட்டுநருக்கும் தந்தை, மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்தனர். பின்னர் மதுக்கரை அருகே சுற்றுலா வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கே.ஜி. சாவடி மற்றும் மதுக்கரை பகுதிகளில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தைச் சுற்றி அடுத்தடுத்து நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவக்கரையில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் காயமடைந்த நிலையில், மதுக்கரையில் சுற்றுலா வாகனத்தை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது, இன்று (செப்டம்பர் 2) மாலை சுமார் 5.30 மணியளவில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி ஃபோர்ஸ் அர்பானியா வாடகை வாகனத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு பயணம் செய்துகொண்டிருந்தது.

சுற்றுலா வாகனம் கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொச்சி–சேலம் புறவழிச்சாலையில், நவக்கரை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, ஓட்டுநருக்கும் அங்கு நின்றிருந்த லோகநாதன் (52), அவரது மகன் உகேந்திரன் (21) ஆகியோருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்தத் தகராறில் லோகநாதன் மற்றும் உகேந்திரன் இருவரும் காயமடைந்தனர்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் அங்கிருந்து மதுக்கரை நோக்கிச் சென்றது. மதுக்கரை சந்தை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தகவலறிந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுக்கரை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பிச் சென்ற நபர்களை அடையாளம் காண்பதுடன், நவக்கரையில் ஏற்பட்ட தகராறுக்கும் மதுக்கரையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மிரட்டல் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் உண்மை நிலையை உறுதி செய்யும் வகையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி சுற்றுலா வாகனம் நிறுத்தம்: கோவை நவக்கரையில் பரபரப்பு

கோவை நவக்கரை அருகே மலேசிய சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகன ஓட்டுநருக்கும் தந்தை, மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவர் க...

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி AR/VR ஆய்வகத்தில் 544 மாணவர்கள் பயன்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் AR/VR மெய்ந...

Tourist Vehicle Stopped After Firearm-Like Object Displayed Near Madukkarai; Police Probe

A group of Malaysian tourists travelling from Kerala towards Chennai were involved in an altercation with two persons ne...

Coimbatore Corporation Commissioner Inspects Homeless Shelters in Central and South Zones

Coimbatore Corporation Commissioner Katta Ravi Theja IAS conducted a detailed inspection of urban homeless shelters in C...

Power Outage Tomorrow (03.09.2026) at Saravanampatti Substation

Tamil Nadu Electricity Board announced scheduled monthly maintenance at Saravanampatti substation tomorrow September 3 f...

Inspection of Health Centre, Water Supply Maintenance and Sanitation Works in Ward 27 of Singanallur Constituency

Coimbatore Singanallur constituency Ward Councilor Ambika Thanabal personally inspected the health center, saltwater pip...