கோவை மாவட்டத்தில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை “நிழல்” (Nizhal) என்ற தளம் வாயிலாகவோ அல்லது 94981 81212 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிலும், 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என காவக்துறை அறிவித்துள்ளது.
Coimbatore: கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபிடினா நாயக் (20) மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபிடினா நாயக்(20) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதி, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, பரிந்துரை செய்தார்.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட குற்றவியல் நடுவருமான பவன் குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., பாபிடினா நாயக்கை ‘போதைப்பொருள் குற்றவாளி’ (Drug Offender) என்ற பிரிவின் கீழ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (Nizhal) என்ற கியூஆர் குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளம் வாயிலாகவோ அல்லது 94981 81212 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிலும், 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.