சர்வதேச தாய்மொழி தின கட்டுரைப் போட்டி
Event Detail
Organized by: The Hindu
Entry Fee: Free
அன்புடையீர்! 

வணக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழியாம் தமிழில் சிந்திப்பதையும் எழுதுவதையும் ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியினை The Hindu ஆங்கில நாளிதழும் கோவை நன்னெறிக் கழகமும் இணைந்து நடத்துகிறது. 

விதிமுறைகள்: 

1. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 8 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

2. கீழ்க்காணும் 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தமிழில் கட்டுரை எழுதி அனுப்பவேண்டும். கட்டுரைகள் ஏ4 அளவுள்ள தாளில் மூன்று முதல் ஒன்பது பக்கங்கள் வரை இருக்கலாம். கட்டுரை சொந்த சிந்தனையில் சுய உழைப்பில் எழுதப்பட்டிருக்கவேண்டும். கட்டுரைக்காகப் பயன்படுத்தப்பட்ட நூல்களின் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்.

3. ஒரு பள்ளியிலிருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். தலைமை ஆசிரியரின் சான்று கையொப்பத்துடன் கட்டுரைகளை நேரிலோ அல்லது தபாலிலோ கோயம்புத்தூர் தி ஹிண்டு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20-02-2019

4. கட்டுரையுடன் மாணவரின் பெயர், வகுப்பு, வீட்டு முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் தெளிவாக இணைக்கப்பட வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர் என்றால், தலைமை ஆசிரியரின் தொடர்பு எண்களைத் தவறாமல் குறிப்பிடவும்.

5. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரபல எழுத்தாளரின் கரங்களால் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள். பரிசளிப்பு விழா நடைபெறும் நாள், இடம் குறித்த தகவல்கள் நேரடியாகவும், பள்ளி மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள்:

* வழிகாட்டும் வள்ளுவம்

* என்றென்றும் காந்தி

* ஜெயகாந்தன் எனும் சகாப்தம்

* கம்பனின் சொல்லாட்சி

* என்னை ஈர்த்த சிறுகதை

கட்டுரைகள் வந்து சேரவேண்டிய முகவரி:

சர்வதேச தாய்மொழி தின கட்டுரைப் போட்டி

தி ஹிண்டு, 19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோயம்புத்தூர் - 641018

தொடர்புக்கு: 9442308242 / 9003931234

VENUE & CONTACT INFORMATION

Venue: கோவை

Location: கோவை

Phone: 9442308242, 9003931234

Date
Feb 11 - Feb 21
Timing
10:00 AM