தமிழர் திருவிழா 2018 – கோவை
Event Detail
Organized by: Nayam Experience
Entry Fee: Paid
Rs. 100
கோவையில் பிரம்மாண்ட 'தமிழர் திருவிழா' கோவை மாநகரிலே ஒரு பெருவிழா..!

பண்டைத் தமிழர்களின் வீரத்துக்கும், விவேகத்துக்கும் கட்டியம் கூறும் விழா;


அவர்தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழா; விளையாட்டுத் திருவிழா; வீரத் திருவிழா;

பொங்கல் நல்விழா..!

"கால்நடை கண்காட்சி:"

நாட்டுமாடுகள், நாட்டுநாய்கள், நாட்டுக்குதிரைகள், சண்டக்கிடா, சண்டைசேவல்

இவற்றுடன் தமிழர்போர்க் கருவிகள்.

"பாரம்பரிய விளையாட்டுகள்:"

சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக்கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லாசுத்துதல், உண்டிவில், ஸ்லோசைக்கிள், கில்லிதான்டி, நொண்டி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம் இன்னும் பல. . .

"பாரம்பரிய நிகழ்ச்சிகள்:"

கரகாட்டம், ஒயிலாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், , துடும்பாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், கும்மியாட்டம், சலங்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதம், கொக்கலி, மல்லர்கம்பம், கயிர்க்கம்பம், தெருக்கூத்து இத்துடன் இன்னும் பெருமை சேர்க்க வில்லுப்பாட்டு, கிராமியப்பாட்டு.

"மேலும்:"

மட்பாண்டம் செய்தல், மஞ்சநீர், கிளிஜோசியும், அம்மிஅரைத்தல், உலக்கைக்குத்துதல், சாணம்தட்டுதல், கடைவீதியுடன் கூடிய கிராமிய உணவு வகைகள்.

"சிறப்பு சாதனை முயற்சி:"

ஒரே இடத்தில 2500 பேர் பொங்கல் வைப்பது. விருப்பம் உடையோர் ஜனவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், கிராமிய நாட்டுப்புற கலைகளை கண்டுரசிக்க; கலைஞர்களின் கரங்களுக்கு வலிமை சேர்க்க; அவர்தம் வாழ்வில் வசந்தம் வீச; வளமை சேர ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் அணி திரண்டு வாரீர்...! வாரீர்...!சங்கமிப்போம், சரித்திரம் படைப்போம்!

பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்

*பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் வாரீர் *

தமிழர் திருவிழா, இது நம்விழா...!

VENUE & CONTACT INFORMATION

Venue: ராதாகிருஷ்ண மில்ஸ் வளாகம்

Location: (PSG Tech கல்லூரி அருகில்), கோவை

Website: www.nayamexperience.com

Phone: 9677715916, 9677715915

Email: nayamexperience@gmail.com

Date
Jan 13 - Jan 15
Timing
10:00 AM - 09:00 PM