கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 



37-வது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்ற இத்தொடரில் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் 57 அணிகளும், பெண்கள் பிரிவில் 50 அணிகளும் கலந்து கொண்டன. பெண்கள் பிரிவில் 57 புள்ளிகள் பெற்ற பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி முதலிடத்தையும், நிர்மலா கல்லூரி அணி 53 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. 



இதேபோல, ஆண்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 81 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது. 59 புள்ளிகள் பெற்ற என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2-வது இடத்தைப் பிடித்தது. முன்னப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தடகளப் போட்டியில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் கமிட்டியின் உறுப்பினர் என்.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார். 

சாதனைகளின் பட்டியல் : 



சரவணன் (எஸ்.டி.சி., கல்லூரி, பொள்ளாச்சி) குண்டு எரிதலில் 16.51 மீ தூரம் வீசி சாதனை நிகழ்த்தினார்.

என். விவேகானந்தன் (பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி) தடை தாண்டுதலில் 14.8 வினாடிகளில் 110 மீட்டர் கடந்து 10 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 

ஆர். ராகுல் (என்.ஜி.பி., கல்லூரி) ஈட்டி எரிதலில் 62.57 மீட்டர் வீசி புதிய சாதனையைப் படைத்தார். 

கவுரவ் யாதவ் (என்.ஜி.பி., கல்லூரி) 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1.54 விநாடிகளில் ஓடி புதிய சாதனைப் படைத்தார். 

பிரவீன்குமார் (பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி) 200 மீட்டர் ஓட்டத்தை 21.6 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். 

4*100 தொடர் ஓட்டத்தில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 49.1 விநாடிகளில் சாதனை படைத்துள்ளது. 

பெண்கள் பிரிவில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த வித்யா 400 மீட்டர் தொடர் ஓட்டத்தை 55.2 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 

Newsletter