பாரதியார் பல்கலை.,க்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று தொடங்கின.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று தொடங்கின.

கல்லூரி மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இன்று தொடங்கிய இந்தப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  இருபாலாருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில், 50 பெண்கள் அணியும், 57 ஆண்கள் அணிகளும் பங்கேற்றுள்ளன. 



100 மீ, 200 மீ மற்றும் 400 மீ, ரிலே,  உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், மினி மராத்தான், 5 கி.மீ. நடைபோட்டி, 20 கி.மீ. நடைபோட்டி, மும்முறை தாண்டுதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 



குண்டெறிதலில் சாதனை : 

பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.டி.சி. கல்லூரியில் எம்.ஐ.பி. 2-ம் ஆண்டு மாணவன் சரவணன், குண்டெறிதலில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்துள்ளார். அதாவது, முன்பு படைத்திருந்த 14.84 மீட்டர் தூரம் குண்டெறிந்து நிகழ்த்தியிருந்த சாதனையை, இந்த முறை 16.51 மீட்டர் தூரம் வீசி பழைய சாதனையை முறியடித்துள்ளார்.  இந்த சாதனையை படைத்ததன் மூலம் மங்களூரூவில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அனைத்து இந்திய பல்கலைக்கழகத்திற்கு இடையிலான தடகளப் போட்டியில் சரவணன் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter