2-வது டிவிசன் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.எம்.எம்.சி.சி அணி வெற்றி

கோவை : சி.டி.சி.ஏ.வின் 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.எம்.எம்.சி.சி, அணி வெற்றி பெற்றது.



கோவை : சி.டி.சி.ஏ.வின் 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.எம்.எம்.சி.சி à®…ணி வெற்றி பெற்றது. 

ரத்தினம் தொழில்நுட்பம் வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்.எம்.எம்.சி.சி. அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து திணறினாலும், கதிரேசன் மற்றும் தொடக்க வீரர் பெருமாளின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். மேலும், சண்முக சுந்தரத்தின் (37(30)) அதிரடியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய விஜய் கிரிக்கெட் கிளப் சீரான விக்கெட்டுக்களை இழந்து திணறினர். ஆர்.எம்.எம்.சி.சி. அணியின் ஆப் -ஸ்பின்னர் ரகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிரணியை 128 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், 93 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.எம்.எம்.சி.சி. அணி வெற்றி பெற்றது. 

இதேபோல, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் டிவிசன் போட்டியில் 135 ரன்கள் மட்டுமே குவித்த ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, வெறும் 69 ரன்களுக்கு எதிரணியான ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது. 

Newsletter