அண்ணா பல்கலை.,யின் உள்மண்டல வாலிபால் போட்டியில் மகுடம் சூடியது செயிண்ட் ஜோசப் கல்லூரி

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

கோவை : à®…ண்ணா பல்கலைக்கழகத்தின் உள்மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 



கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 19 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 400 வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் மண்டல அளவில் வெற்றி பெற்ற 38 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்டன. இதில், செயிண்ட் ஜோசப் கல்லூரி அணி , நடப்பு சாம்பியன் பனிமலர் பொறியியல் கல்லூரி அணியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 



3-வது இடத்திற்கான போட்டியில் கொங்கு பொறியியல் கல்லூரி 2-0 என்ற செட் கணக்கில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை தோற்கடித்தது.



இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கே. பொம்மண்ணா ராஜா, உடற்கல்வி இயக்குநர் பி.தம்பிதுரை மற்றும் துணை உடற்கல்வி இயக்குநர் ஆர். ஸ்டாலின் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். 

Newsletter