மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சுகுணா பி.ஐ.பி. பள்ளி அணி சாம்பியன்

கோவை : 41-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில சுகுணா பி.ஐ.பி. பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : 41-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில சுகுணா பி.ஐ.பி. பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.



41-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகள் சஹோயா பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 87 பள்ளிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 4 பிரிவுகளின் கீழ் நடந்த இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சுகுணா பள்ளி மாணவர்களே முன்னிலை பெற்றனர்.



இதில், சி.எஸ். அகாடமி கோவை மற்றும் ஈரோடு அணிகள் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இதேபோல, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் கோவை நேஷனல் மாடல் பள்ளி முதல் இடத்திலும், சுகுணா பிஐபி பள்ளி 2-வது இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில், ஈரொடு சி.எஸ். அகாடமி முதல் இடத்தையும், எஸ்.எஸ்.வி.எம்., மேட்டுப்பாளையம் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.



பெண்கள் பிரிவில் சுகுணா பி.ஐ.பி. பள்ளி 14 மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தது. இதேபோல, யு16 பிரிவில் நேஷனல் மாடல் பள்ளி முதலிடத்தையும், சுகுணா பி.ஐ.பி. பள்ளி 2வது இடத்தையும் பிடித்தது.

Newsletter