கோத்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆஸி., விளையாட்டுக் குழு

நீலகிரி : கோத்தகிரியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ரிச்மண்ட் டைகர் விளையாட்டு குழுவினர் விளையாட்டுத் திறன் கண்டறியும் 2 நாள் முகாம் நடைபெற்றது.

நீலகிரி : à®•ோத்தகிரியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ரிச்மண்ட் டைகர் விளையாட்டு குழுவினர் விளையாட்டுத் திறன் கண்டறியும் 2 நாள் முகாம் நடைபெற்றது. 



ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விளையாட்டு பயிற்சியாளர் கார்த்திக் தலைமையில் விளையாட்டு அறிவியல் நிபுணர்கள் மற்றும் திறன் கண்டறியும் குழுவை சேர்ந்த 27 பேர் பயிற்சி அளித்தனர். நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ உடல் ரீதியாக தகுதியாக உள்ளவராக அவருடைய விருப்ப விளையாட்டை விளையாடக் கூடிய உடல் தகுதி உள்ளதா..? என்பதை கண்டறிய பல்வேறு சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.



இதன்மூலம், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் முறையான பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக உருவாக முடியும் என பள்ளி நிர்வாகம் கூறியது. உலகிலேயே விளையாட்டின் முன்னோடியான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விளையாட்டு தொழில்நுட்பத்தை நீலகிரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறினர். மேலும், ஆஸ்திரேலியா அரசு ஒத்துழைப்பில் கால்பந்து அணி உருவாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது.



ஆஸ்திரேலியாவின் மிக புகழ்பெற்ற ரிச்மண்ட் டைகர் குழுவோடு மற்ற அமைப்பு பயிற்சியாளர்களும், இந்த முகாமில் கலந்து கொள்ள வந்ததாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter