தேசிய அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டிக்கு கோவையைச் சேர்ந்தவர்கள் தகுதி

கோவை : ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்


கோவை : ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிக்கு கோவையைச் சேர்ந்தவர்கள்  à®¤à®•ுதி பெற்றுள்ளனர். 

தேசிய அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டிகள் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்க இருக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான துப்பாக்கிச்சூடு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், கோவை துப்பாக்கிச்சூடு கிளப்பைச் சேர்ந்த என். நிவேதா, என். கீர்த்தனா, கே.எஸ். செந்தில்குமார் மற்றும் பி. ரமேஷ்குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 



அண்மையில், தெலுங்கானா துப்பாக்கிச்சூடு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட தேசிய தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில், 3 தங்கம், 4 வெண்கலம் உள்பட 7 பதக்கங்களை வென்றதன் மூலம் அவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப் போட்டியில், பெண்கள் பிரிவில் தனிநபர் டிராப் பிரிவில் என். நிவேதா (109/125) தங்கமும், தனிநபர் ஸ்கீட் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் என். கீர்த்தனா (85/125) இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். 



இதேபோல, ஆண்கள் பிரிவில் கே.எஸ். செந்தில்குமார் இரண்டு வெண்கலப் பதக்கங்களும், பி. ரமேஷ் குமார் இரண்டு தங்கப்பதங்களையும் கைப்பற்றினர். இந்தத் துப்பாக்கிச்சுடுதலில் தமிழகம் ஒட்டுமொத்தமாக 329 புள்ளிகள் எடுத்தது. 348 புள்ளிகளுடன் தெலுங்கானா தங்கப்பதக்கதைத் வென்றது

Newsletter