பளுதூக்கும் போட்டியில் நிர்மலா மகளிர் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் நிர்மலா மகளிர் கல்லூரி அணி சாம்பியன் சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் நிர்மலா மகளிர் கல்லூரி அணி சாம்பியன் சாம்பியன் பட்டம் வென்றது. 



நிர்மலா மகளிர் கல்லூரியின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 8 கல்லூரிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 47 கிலோ எடைக்குக் கீழ் மற்றும் 84 கிலோ எடைக்கு மேல் என இருபிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், நிர்மலா மகளிர் கல்லூரி அணி ஒட்டுமொத்தமாக வெயிட் லிஃப்ட்டிங்கில் 190 புள்ளிகளும், பவர் லிஃப்ட்டிங்கில் 60 புள்ளிகளும் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 



இதேபோல, பி.கே.ஆர். கலை கல்லூரி 48 புள்ளிகளுடன் 2-வது இடமும், ஈரோடு கலை கல்லூரி 37 புள்ளிகளடன் 3-வது இடத்தையும் பிடித்தன. 



மேலும், நிர்மலா கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஏ. சவுமியா சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தையும், அரசு கலை கல்லூரியைச் சேர்ந்த பி.நிஷாந்தினி வலிமையான பெண் என்ற பட்டத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., கே. பெரியய்யா கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிக் கவுரவித்தார். 

Newsletter