15,000 பேர் பங்கேற்ற மாபெரும் கோயம்புத்தூர் மாரத்தான்

கோவை: கோவையில் ஆறாவது முறையாக நடைபெறும் கோயம்புத்தூர் மாரத்தானில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

கோவை: கோவையில் ஆறாவது முறையாக நடைபெறும் கோயம்புத்தூர் மாரத்தானில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேசன் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது.



21.1, 10 மற்றும் 5 கிலோ மீட்டர்கள் என்று மூன்று பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏடிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

10 கிலோ மீட்டர் - பெண்கள் பிரிவில் சவுமியா முதலிடத்தையும், கிருத்திகா இரண்டாம் இடத்தையும் பிடித்தார். 

ஆண்கள் பிரிவில் சதீஸ் குமார் முதலிடத்தையும், விஜய் பிபின் ராஜ் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

21 கிலோ மீட்டர் போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜ்குமார் முதலிடத்தையும், சங்கர் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

பெண்கள் பிரிவில் சோனியா முதலிடத்தையும், பிரேமா இரண்டாமிடத்தையும் பிடித்தார்.

Newsletter