ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் இன்று தொடங்கியது.


கோவை : ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் இன்று தொடங்கியது. 

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் ஒருநாள் முகாமில் கலந்து கொண்டனர். 



சர்வதேச அளவில் சிறந்த பயிற்சியாளர்களான இரானின் ஹொசைன் பார்ஷி, இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ்குமார், விகாஷ், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ருடான்டோ, இலங்கையின் அருணா சொய்ஷா, வங்கதேசத்தின் ஸ்ருவோ இஸ்லாம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீரர்களுக்கு நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தனர். 

"பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உடல் அளவிலான கலையை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். வீரர்களின் தைரியம் மற்றும் சக்தியை வலிமைப் படுத்த கராத்தே உதவுகிறது," என்றார் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி. பேபி à®šà®•ிலா.



நாளை நடக்கும் 3-வது சர்வதேச கராத்தே போட்டியில் மலேசியா, இந்தோனேசியா, இரான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 

Newsletter