சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

கோவை : சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கியது.

கோவை : சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கியது.



மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாரில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தென்மண்டல அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர். 

தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 பள்ளிகளில் இருந்து சுமார் 1,500 மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். 



வரும் 30-ம் தேதி வரை நாக் - அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சென்னை எஸ்.பி.à®’.ஏ., பள்ளி, மகாராஷ்டிரா சஞ்சய் கோதாவஜ் பள்ளியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 

இதேபோல, 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் நாக்பூர் விமல்தாய் பள்ளி 2-1 என்ற கோல் கணக்கில் கூர்க் பி.வி.பி பள்ளியை வென்றது. 



19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் இன்டர்நேஷனல் பள்ளி, 2-1 என்ற கோல் கணக்கில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளியை வீழ்த்தியது. வரும் 30-ம் தேதி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Newsletter