News
கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (12.11.2026) மின்தடை
SimpliCity News Team · 12 days ago

Coimbatore: கோவை மாவட்டம், பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (12.11.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெற உள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் சாலை, புளியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி சாலை (ஒரு பகுதி), மீனா எஸ்டேட் மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களுடைய பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.