News
கோவையில் குட்கா விற்பனைக்கு எதிராக சோதனை: 40 பேர் கைது, 53.536 கிலோ பறிமுதல்
SimpliCity News Team · 13 days ago

Coimbatore: கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து 09.10.2026ம் தேதியன்று தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் இந்த கூட்டு சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது மொத்தம் 213 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 40 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 53.536 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன் விதிமீறல் நடத்திய 40 கடைகளுக்கு சீல் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர மற்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை காவல்துறையினருக்கு உடனடியாக தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
