News
கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்
SimpliCity News Team · 05 Sept 2026
Coimbatore: கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற தனியார் நில உரிமையாளர்களுக்கு 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகமே அகற்றி அதற்கான செலவை நில உரிமையாளரிடம் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P(MD) எண். 16485/2015, 14699/2015 மற்றும் W.P எண். 3075/2017 ஆகிய வழக்குகளில் 21.08.2026 தேதியிட்ட தீர்ப்பின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அந்தந்த நில உரிமையாளர்கள் தாங்களாகவே இந்த அறிவிப்பு வெளியாகும் நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வேருடன் முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதனை நில உரிமையாளர்கள் செய்யத் தவறினால், மாநகராட்சி நிர்வாகமே இந்த சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும். மேலும் அதற்கான முழு செலவினத்தையும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமைக் கருவேலமரம் ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட வெளிநாட்டு இனமாகும். இது வேகமாக வளர்ந்து நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் இயல்பு கொண்டது என்பதால் இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் உள்ள சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் அகற்றி, சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
coimbatore corporationprosopis julifloraremoval noticemadras high courtprivate landstree removalcivic bodyland owners
Related stories
News
Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam
03 Sept 2026
News
Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow
02 Jun 2026
News
பெரியார் நகர் பகுதியில் போடப்பட்ட சாலையை ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை
08 Feb 2024
News
Coimbatore Corporation Commissioner Inspects The New Amrut Drinking Water Project In Person!
08 Dec 2020