கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கப்பட்டுள்ள பணியிடத்திலேயே 15 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட நடமாடும் தரக்கட்டுப்பாடு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் பல்வேறு வகையான திட்டப் பணிகள் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் பணிகள் தினமும் மாவட்ட ஆணையர் மற்றும் ஆட்சியரால் தினமும் நேரடி ஆய்வு செய்யபடுகின்றனர்.

இவ்வாறு நிகழும் பணிகளை அதன் தரத்தை ஆய்வு செய்யும் பொருட்டு நடமாடும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வக வாகனம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அலுவலகத்தில் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகளின் தர ஆய்வை மேற்கொள்ளபடும்.
இந்த நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் உள்ள 20–க்கும் மேற்பட்ட தரக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பணியிடத்திலேயே 15 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், ஆய்வு முடிவுகளை இணைய வழி திட்ட கண்காணிப்பு முறையில் நிகழ்நேர பதிவேற்றம் செய்யும் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் போது மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.