Health
கோவையில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று - தமிழகத்தில் கோவை முதலிடம்!
SimpliCity News Team · 13 Mar 2023
கோவை: கோவை மாவட்டத்தில் 58 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை காலங்களில் கோவையில் அனைத்து துறைகளும் முடங்கியன. இந்த நிலையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் அனைத்து துறைகளும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இதனிடையே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க துவங்கியுள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் நேற்றைய தினம் மூன்று பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 58 பேர் தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் மாநில அளவில் கோவை முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கங்களில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி முக கவசம் அணிய தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
Related stories
News
10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested
08 Sept 2026
News
“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore
14 May 2026
News
“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam
06 May 2026
News
கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
10 Jul 2023
News
Decomposed body of female sanitary worker found inside house in Vadavalli
24 Jul 2021