Govt Notification
கோவையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கிட தரமதீப்பீடு முகாம்
SimpliCity News Team · 15 Jul 2019

கோவை : கோவையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் பெற தகுதியுடைய குழுவினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட ரூ. 550 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கடன் பெற தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுவினர் ஊரகப்பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி அலுவலகத்திலும், மாநகராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல மகளிர் திட்ட பணியாளர்களிடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், விபரங்களுக்கு இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோவை என்ற முகவரியிலும் 0422-2301 855, 9444094255 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.