Govt Notification
கோவை காட்டூரில் தடைசெய்யப்பட்ட நெகிலி பொருட்கள் பறிமுதல்; தனியார் நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்
SimpliCity News Team · 16 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட காட்டூர், ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிலி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, நிறுவன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் தடைசெய்யப்பட்ட நெகிலி பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மாநகராட்சி சார்பில் நிறுவன உரிமையாளருக்கு மொத்தம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 06.10.2026-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.