Govt Notification
கோவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு தரிசன வாராந்திர ரயில் இயக்கம்..!
SimpliCity News Team · 09 Feb 2022
கோவை: கோவையில் இருந்து திருப்பதிக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு தரிசன வாராந்திர ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஐ.ஆா்.சி.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவையில் இருந்து வாரந்தோறும் செல்லும் சிறப்பு ரயில் சேவை மூலமாக திருப்பதியில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்படும்.
வாரந்தோறும் ரயில் மூலம் திருப்பதி செல்ல குளிா்சாதன பெட்டி வசதியுடனான இருக்கைக்கு, ஒருவருக்கு ரூ.4,600, சாதாரண இருக்கைக்கு ஒருவருக்கு ரூ.3,300 முதல் துவங்குகிறது. இதில், திருப்பதி சிறப்பு தரிசன கட்டணம், சைவ உணவு கட்டணம் (காலை மற்றும் இரவு), சுற்றுலா வழிகாட்டி, குளிா்சாதன வசதியுடனான தங்கும் விடுதி, பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். இந்த யாத்திரை ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழித்தடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.
மேலும், விவரங்கள் மற்றும் முன்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள கோவை அலுவலக கைப்பேசி எண்கள் 8287931965, 9003140655 அல்லது இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.