Govt Notification
கோவையில் 215-மையங்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம்!
SimpliCity News Team File Photo · 12 Nov 2021
கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோவிட் -19 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14.11.2021 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் 215 மையங்களில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் 90 சதவீதம் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
(கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84- நாட்கள் முடிவடைந்தவர்கள் மற்றும் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28-நாட்கள் முடிவடைந்தவர்கள்) இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது. மேலும் 100 சதவீத பாதுகாப்பும் கிடைக்கப் பெறுகிறது.
மேலும், அசைவ உணவு எடுத்துக் கொள்வதற்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் 100 சதவீத பாதுகாப்பைப் பெற 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.