Govt Notification
முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்- தென்னக ரயில்வே அறிவிப்பு.!!
SimpliCity News Team · 25 Oct 2021
கோவை: நவம்பர் 1-ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வேயில் 23-எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் நாடு முழுவதும் உள்ள ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டன. முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, தற்போது நோய்த் தொற்று குறைந்ததையடுத்து முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராமேஸ்வரம்- திருச்சி, திருச்சி- ராமேஸ்வரம், சென்னை- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி- பாலக்காடு டவுன், கண்ணூர்- கோவை, கோவை- கண்ணூர், நாகர்கோவில்- கோட்டயம், கோட்டயம்- நாகர்கோவில், கோவை- மங்களூரு, மங்களூரு - கோவை, நாகர்கோவில்- கோவை, கோவை- நாகர்கோவில், திருச்சி- திருவனந்தபுரம்- திருவனந்தபுரம் திருச்சி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம்.