Govt Notification
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிட மாற்றம்..!
SimpliCity News Team · 23 Oct 2021
கோவை: கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலராகப் பொறுப்பு வகித்து வந்தவர் ரா.ஜெகதீஷ். இவர் தற்போது நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் நியமிக்கப்படும் வரை, நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, கோவை மாவட்ட பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.