Govt Notification
கல்வி அறிவு மேம்பாட்டு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!
SimpliCity News Team · 13 Oct 2021
கோவை: கல்வி அறிவு மேம்பாட்டு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை மற்றும் அனைத்து வகையான தொழில் கல்வி தொழில் சார்ந்த பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு தொகுப்பு நிதி கல்வியறிவு மேம்பாட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நிலைத்திருந்து நிலுவை வைத்திருந்து பட்டப் படிப்பை தொடரும் பட்சத்தில் அவர்களின் இறுதி ஆண்டு தவிர, முந்தைய அனைத்து ஆண்டுகளுக்கும் கல்வியறிவு மேம்பாட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கல்வியறிவு மேம்பாட்டு நிதி உதவி வேண்டி விண்ணப்பிப்பதற்கான இந்த அமைக்கப்பட்ட கால வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி கல்வியறிவு மேம்பாட்டு நிதி உதவியை முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.