Govt Notification
தொழில் திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
SimpliCity News Team · 14 Nov 2019

கோவை: கோவை மாவட்ட தொழில் திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் , சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் ஜனவரி 2020ல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க https:worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் இத்திறனாய்வு போட்டிகள் 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 25.11.2019. வயது வரம்பு 20 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (1.1.1999 அன்றோ அல்லது பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர்).
ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்றவர்கள் பட்டப் படிப்பு முடித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழிற் நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள்,
குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள்(PMKVY) மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களை அறிந்திட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் , கோயம்புத்தூர்-29, தொலைபேசி எனர் 0422-2642044 என்ற எண்ணிலும்,நேரிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.