Govt Notification
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் திரும்ப ஒப்படைக்க இயலாது - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
SimpliCity News Team File Photo · 12 Nov 2019

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை மற்றும் இதர கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் இடையூறாக பொது இடங்களிலோ அல்லது சாலைகளிலோ சுற்றித்திரியும்படி விடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தங்களது சொந்த இடத்தில் மட்டுமே பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் மீறினால் மேற்படி கால்நடைகளை பிடித்தம் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் கால்நடைகளை உரிமை கோரும் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க இயலாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.