Govt Notification
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான விருது ; விண்ணப்பங்கள் வரவேற்பு
SimpliCity News Team · 17 Oct 2019

கோவை : மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் 03.12.2019 அன்று சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விருது பெறுபவர்களுக்கு 10 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பங்களை www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் கொள்ளுமாறும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் கோவையில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதனை செய்தமைக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்க்கான விருது.
2. மாற்றுத்திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்க்கான சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவர்க்கான விருது. (2019-2020)
3.மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கான விருது. (2019- 2020)
4. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் பயிற்சி அளித்தமைக்கான சிறந்த நிறுவனத்திற்கான விருது. (2019-2020)
5. மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்கான சிறப்பாக சேவை புரிந்தமைக்கான சமூக பணியாளர்க்கான விருது. (2019-2020)
6. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதனை செய்தமைக்கான சிறந்த ஆசிரியருக்கான விருது. (2019-2020)
மேற்கண்ட "விருதுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வழங்கிடுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.