Govt Notification
கிறித்தவர்கள் ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
SimpliCity News Team File Photo · 14 Oct 2019

தமிழ்நாட்டைச் சோந்த கிறித்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் “புனித பயணம் மேற்கெள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும், நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள் அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம் நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவமத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் நவ., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “கிறித்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020” என்று குறிப்பிட்டு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம் சேப்பாக்கம், சென்னை-600 005 : என்ற முகவரிக்கு நவ., 30ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். (நேரில் வரவேண்டியதில்லை).
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறுபான்மையினர் நல இயக்குநரகம், தொலைபேசி எண்.044-28520033-த்திலும் தொடர்புகொள்ளலாம்.