Govt Notification
கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ; 49 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
SimpliCity News Team · 09 Oct 2019

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 49 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச்சோந்த பொதுமக்கள் 49 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநா வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர்கள் வி.சரவணன் (கணக்கு), என்.அண்ணாதுரை (வருவாய்), செயற்பொறியாளர் பார்வதி (குடிநீர் பிரிவு) ஆகியோர் இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், செல்வன், மகேஷ்கனகராஜ், மேற்கு மண்டல செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலா் கே.பழனி அவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.