Govt Notification
மழையின் காரணமாக நாளை இயங்கும் கோவை - மும்பை ரயில் புனே வரை மட்டுமே இயக்கம்
SimpliCity News Team · 06 Aug 2019

கோவை : தொடர் மழையின் காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நாளை (ஆக.,7) கோவை - மும்பை (11013) ரயில் பாதி வரையில் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன், சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் சேவையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நாளை இயக்கப்படும் கோவை - மும்பை (11013) ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படுகிறது. புனே - மும்பை வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.