Govt Notification
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா..? : போக்குவரத்து வீதிமீறல் குறித்த அபராதத் தொகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
SimpliCity News Team · 02 Aug 2019

கோவை : போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இரட்டிப்பாகும் வகையில் சட்ட திருத்தம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான தொகை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சட்டத்தின் மீது பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், நுண்ணறிவு போக்குவரத்து முறை மூலம் கண்காணிக்கப்படுவதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்பதற்காகவும் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
| குற்றங்கள் | முந்தைய கட்டணம் | புதிய கட்டணம் |
| ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டுதல் | ரூ. 500 | ரூ. 5,000 |
| தகுதியின்றி வாகனம் ஓட்டுதல் | ரூ. 500 | ரூ. 10,000 |
| அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் | ரூ. 400 | ரூ. 1,000 (இலகுரக
வாகனங்களுக்கு) ரூ. 2,000 (நடுத்தர பயணிகள் வாகனம்) |
| ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதல் | ரூ. 1,000 | ரூ. 5,000 |
| குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் | ரூ. 2,000 | ரூ. 10,000 |
| ரேசிங் | ரூ. 500 | ரூ. 5,000 |
| அதிக பாரத்துடன் வாகனத்தை இயக்குதல் | கூடுதல் நபருக்கு தலா ரூ. 1,000 வீதம் | |
| சீட் பெல்ட் அணியாமல் | ரூ. 100 | ரூ. 1,000 |
| இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் | ரூ. 100 | ரூ. 1,000 |
| அவரச ஊர்திகளுக்கு வழிவிடாமல் வாகனத்தை இயக்குதல் | ரூ. 10,000 | |
| காப்பீடு இன்றி ஓட்டுதல் | ரூ. 1,000 | ரூ. 2,000 |
| சிறார் வாகனம் ஓட்டுதல் | வாகன உரிமையாளர், காப்பாளருக்கு
ரூ. 25,000 3 ஆண்டு சிறை, சிறார் மீது நடவடிக்கை, வாகனப் பதிவு |