Govt Notification
கோவையில் வரும் 31-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம்
SimpliCity News Team · 27 Jul 2019

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 31-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-மாற்றுத்திறனாளிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் வரும் 31-ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.